தப்பித்த பாபர் அசாமின் கேப்டன் பதவி… புதுத் தலைவர் ஆதரவு!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (09:35 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால்,  கேப்டன் பொறுப்பில் இருந்து பாபரை நீக்க முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரைக்கும் சென்று  இரண்டாம் இடம் பெற்றது.

இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 14 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. தற்போது 3 டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய பாகிஸ்தானுக்கு விமர்சனம் குவிந்து வருகிறது.

மேலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமுக்கு எதிராக முன்னாள் கருத்து கூறி, அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்ன விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி பாபர் அசாமுக்கு முழு ஆதரவையும் அளித்துள்ளதால், அவரே தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments