Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவர்ப்ளேக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆஸி… வெற்றியை நோக்கி நியுசி!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (15:04 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இதுவரை பயிற்சி ஆட்டங்கள் மற்றும் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று முதல் சூப்பர் 12 லீக் போட்டிகள் தொடங்கி உள்ளன. இன்றைய முதல் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 200 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் டிவொன் கான்வாய் அபாரமாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பின் ஆலென் 16 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸி அணி தற்போது பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் பவர்ப்ளே முடிவதற்குள் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் வார்னர் 5 ரன்களும், பின்ச் 13 ரன்களும், மார்ஷ் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். தற்போது 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 41 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டாய்னஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments