Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்துகு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

Advertiesment
இங்கிலாந்துகு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!
, சனி, 8 ஜனவரி 2022 (15:14 IST)
சிட்னியில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்த வருட ஆஷஸ் தொடர் ஆரம்பம் முதலே ஒரு பக்க சார்பாகவே செல்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஆஸி அணி இங்கிலாந்தை அடித்து துவைத்து வருகிறது. ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகளை ஆஸி வென்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்துவருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 416 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போலவே சொதப்ப ஆரம்பித்தது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்ததால் கௌரவமான ஸ்கோரை எட்டியது. 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸி 122 ரன்கள் முன்னிலை பெற்றது. அதையடுத்து களமிறங்கிய ஆஸி இரண்டாவது இன்னிங்ஸில் 265 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கவாஜா இரண்டாம் இன்னிங்ஸிலும் சதம் அடித்து கலக்கினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 30 ரன்கள் சேர்த்து விக்கெட் இழக்காமல் ஆடி வருகிறது. நாளை ஐந்தாம் நாள் ஆஸி வேகப்பந்து தாக்குதலை சமாளித்து டிரா செய்யுமா அல்லது விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிட்னி டெஸ்ட்டிலும் மண்ணைக் கவ்வபோகும் இங்கிலாந்து!