100 வது டெஸ்ட் போட்டி:ஆஸ்திரேலியா வீரர் புதிய சாதனை!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (18:04 IST)
100 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஸஷ் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2 -0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்கியது. இதில், இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மேலும், ஆஸ்திரேலியா  வீரர் ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் போட்டியில் 100 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார். கடந்த 2010 டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நிலையில், இன்று 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.

இதுவரை 99 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 9,113 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 32 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments