இன்று நடைபெறும் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் நிலையில் டாஸை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
2023ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டிக்கு இந்தியா 4வது முறையாக தகுதி பெறும் போட்டி இதுவாகும். முந்தைய மூன்று முறைகளில் இரண்டு முறை வெற்றியும், ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது இந்தியா. இந்த உலக கோப்பை போட்டியில் முதல் லீக் போட்டியில் தொடங்கிய இந்தியா – ஆஸ்திரேலியா மோதல் இறுதி போட்டி வரை வந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தனது அதிரடியை காட்டி ரன்களை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளிலுமே எந்த மாற்றமும் இல்லாமல் அதே 11 வீரர்களே தொடர்கிறார்கள்.