இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.
ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள் ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை பாலோ ஆன் தவிர்க்க வைத்து 369 ரன்கள் சேர்க்க வைத்தனர். சிறப்பாக ஆடிய நிதீஷ் குமார் 114 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸி அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. 53 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸி அணியை எவ்வளவு குறைந்த ரன்களுக்குள் சுருட்ட முடிகிறதோ அந்தளவுக்கு அது இந்திய அணிக்கு வெற்றியைப் பெற உதவும்.