ஆஸ்திரேலியா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் பரிதாபகரமான நிலையில் உள்ளது.
ஐந்துமுறை பட்டம் வென்ற ஆஸி அணியின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸி அணி தோல்வியை தழுவிய போது ஆஸி ரசிகர் ஒருவர் கண்ணீர்விட்டு அழுதது இப்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
சம்மந்தப்பட்ட ரசிகரை ஆஸ்திரேலியாவின் தோல்வியை முன்னிட்டு இந்திய ரசிகர்கள் கேலி செய்ததால், அவர் தோல்வியைத் தாங்க முடியாமல் அழுததாக செய்திகள் வெளியாகியுள்ளன.