Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேத்து ‘முடிச்சு வீட்டீங்க போங்க’… இன்னைக்கு ‘இருங்க பாய்’… கலக்கிய இந்திய பவுலர்கள்!

Advertiesment
நேத்து ‘முடிச்சு வீட்டீங்க போங்க’… இன்னைக்கு ‘இருங்க பாய்’… கலக்கிய இந்திய பவுலர்கள்!

vinoth

, சனி, 23 நவம்பர் 2024 (09:55 IST)
16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய நிதீஷ்குமார் எட்டாவது வீரராக இறங்கி 41 ரன்கள் சேர்த்து இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்ட காரணமாக இருந்தார்.

இதையடுத்து ஆடிய ஆஸி அணியும் இந்திய பவுலர்களிடம் சரணடைந்தது. இந்திய அணிக் கேப்டன் பும்ரா மிகச்சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியா டாப் ஆர்டரை சிதைத்தார். இந்நிலையில் இரண்டாம் நாளில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.  இந்திய அணி சார்பாக பும்ரா 5 விக்கெட்களையும், ஷர்தித் ராண் மூன்று விக்கெட்களையும், சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவுன்சர் வந்தால் அதை விட்டுவிடு… இளம் வீரருக்குக் கம்பீர் சொன்ன அட்வைஸ்!