Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன தம்பி உப்புத்தாள் வேணுமா? – வார்னரை கலாய்த்த பார்வையாளர்கள்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (12:37 IST)
கிரிக்கெட் ஆட்டத்தின்போது விக்கெட் இழந்து வெளியேறும் டேவிட் வார்னரை உப்புத்தாளை காட்டி பார்வையாளர்கள் கலாய்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று எட்பாஸ்டனில் கோலாகலமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கி இரண்டு ரன்களே எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். அவர் மைதானத்தை விட்டு வெளியேறும்போது உப்புத்தாள்களை காட்டி பார்வையாளர்கள் அவரை வெறுப்பேற்றினர்.

2018 ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் உப்புத்தாளை கொண்டு பந்தை சேதப்படுத்தியதால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் உள்ளிட்டோர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

நடந்து முடிந்த உலக கோப்பை ஆட்டத்தின்போது இந்தியா-ஆஸ்திரேலியா ஆடியபோது ஸ்டீவ் ஸ்மித்தை இதேபோல் கலாய்த்ததும், அதற்கு கோஹ்லி அப்படி செய்யாதீர்கள் என கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments