விதிகளை மீறிய அஸ்வின் பேச்சு.. அபராதம் விதித்த பிசிசிஐ!

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (08:16 IST)
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின், இந்த ஆண்டுக்கான சீசனில் புதன்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்த மீறல் நிகழ்ந்தது.

ஐபிஎல் நடத்தை விதி 2.7-ன் கீழ் லெவல் 1 குற்றத்தை அஷ்வின் ஒப்புக்கொண்டார். அவரது பேச்சில் “ பனி காரணமாக நடுவர்கள், பந்தை தாங்களாகவே மாற்றினார்கள். எல்லா போட்டிகளிலும் இதுபோல, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதுபற்றி வெளியாகியுள்ள தகவலின் படி, "ஒரு போட்டியில் நிகழும் ஒரு சம்பவம் தொடர்பான பொது விமர்சனம் அல்லது பொருத்தமற்ற கருத்து அல்லது எந்த ஒரு வீரர், அணி அதிகாரி, போட்டி அதிகாரி அல்லது எந்த போட்டியில் பங்கேற்கும் அணி, அத்தகைய விமர்சனம் அல்லது பொருத்தமற்ற கருத்து தெரிவிக்கப்பட்டாலும்" குறிப்பிடப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments