Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

Advertiesment
யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

vinoth

, சனி, 27 ஏப்ரல் 2024 (10:34 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டி 20 வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 261 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி 8 பந்துகள் மீதமிருக்கவே எட்டி கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வழக்கமாக 200 ரன்களைத் தாண்டினாலே முதலில் பேட்டிங் செய்யும் அணியின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். ஆனால் இந்த சீசனில் இதுவரை 5 முறைக்கு மேல் 250 ரன்களைக் கடந்து அணிகள் ஸ்கோர் செய்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் புதிய ஐபிஎல் விதிகள் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர் விதி போன்ற பவுலர்களுக்கு எதிரான விதிகள்தான் என்று பவுலர்கள் புலம்பி வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் அஸ்வின் “பவுலர்களை யாராவது காப்பாற்றுங்கள்” என ட்வீட் செய்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!