சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

vinoth
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (08:18 IST)
கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து தாய் அணியான சிஎஸ்கேவுக்கு கடந்த ஆண்டு திரும்பினார் அஸ்வின். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மொத்தம் நடந்த 14 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு அந்த அணியிலிருந்து விலகி வேறு அணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக தன்னை ட்ரேட் செய்துவிடுமாறு அவர் அணி நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அதை இப்போது மறுத்துள்ளார் அஸ்வின். இது சம்மந்தமாக “நான் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் அடுத்த ஆண்டு நான் அணியில் தொடர்வேனா என்ற விளக்கத்தை மட்டுமே கேட்டுள்ளேன். ஏனென்றால் நான் கடந்த சீசனில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடினேன். அதற்கு முன்பு நான் எல்லா போட்டிகளையும் விளையாடியுள்ளேன். நான் சிஎஸ்கே அணியில் இல்லையென்றால் அவர்களால் சஞ்சுவை வாங்க முடியும்.  என்னை ரிலீஸ் செய்து அவர்கள் சஞ்சுவை வாங்கிக் கொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முக்கிய வீரர் விலகல்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி திட்டம் என்ன?

27 வயதான மாடல் அழகியுடன் 15 வயது ரொனால்டோ மகன் டேட்டிங்? புகைப்படம் வைரல்..!

ஐபிஎல் 2026: கடைசி நேரத்தில் திடீரென புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ.. வீரர்கள் அதிருப்தி..!

மும்பை அணியின் கேப்டனுக்கு ஹர்திக் பாண்டியா தகுதி இல்லை.. சூர்யகுமார் யாதவ்வை போடுங்க: அஸ்வின்

பாகிஸ்தான் வந்தால் கொல்வோம்: டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு மிரட்டல் விடுத்த வன்முறை இயக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments