நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

vinoth
திங்கள், 28 ஜூலை 2025 (14:11 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த உரையாடல்களை தன்னுடைய இணையதள சேனல் மூலமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது இங்கிலாந்து அணி முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

அதில் “நாங்க விளையாடுன காலத்துல எல்லாம் பவுலர்கள் எல்லாம் நல்லா பந்து போட்டாங்க. ஆனா இப்பல்லாம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என பெரிய மனுஷன் (பீட்டர்சன்) ஒருத்தர் சொல்லிருந்தாரு.  அதைப் பார்த்து ரசித்தேன், சிரித்தேன். அடுத்த தலைமுறை வீரர்கள் சிறப்பாக விளையாடுவதைப் பார்த்து அதை பாராட்ட மனசு வரலன்னா, நம்ம இன்னும் அடுத்த கட்டத்துக்குப் போகலன்னு அர்த்தம். நமக்கெல்லாம் தாடி, மீசை எல்லாம் நரைத்ததுக்கு மரியாதையே இல்லை” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments