Publish Date: Wed, 07 Jul 2021 (10:49 IST)
Updated Date: Wed, 07 Jul 2021 (11:00 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி போட்டிக்காக விளையாட உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இப்போது விளையாடி வருகிறார். இதற்காக அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதற்கு முன்னதாக இங்கிலாந்தின் கவுண்ட்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக அவர் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.