Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை தலைகுணிய வைத்துவிட்டார்… அஸ்வின் கோபம்!

vinoth
வியாழன், 29 மே 2025 (07:49 IST)
நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஜிதேஷ் ஷர்மா மரண அடி அடித்துக் கொண்டிருந்த போது லக்னோ அணி பவுலர் திக்வேஷ் மன்கட் முறையில அவரை ரன் அவ்ட் செய்து அப்பீல் செய்தார். இதையடுத்து கள நடுவர் மூன்றாம் நடுவரிடம் அப்பீல் செய்தார். ஆனால் ரிஷப் பண்ட் அந்த அப்பீல் வேண்டாம் என்று களநடுவரிடம் சொல்லிவிட்டார். அதே போல மூன்றாம் நடுவர் சோதித்த போதும் திக்வேஷ் ஆக்‌ஷனை முடித்தபின்னர்தான் ஜிதேஷ் வெளியேறினார் என்பதால் நாட் அவுட் முடிவுக்கு வந்துவிட்டார். ஆனாலும் ரிஷப் பண்ட் ஸ்போர்ட்டிவ்வாக நடந்து கொண்டதாக கருத்துகள் எழுந்தன.

ஆனால் இதன் இன்னொரு தரப்பாக ரிஷப் பண்ட் செய்தது, தன்னுடைய பவுலர் செய்ததற்கு அவர் ஆதரவாக இல்லாமல், அவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டார் எனவும் சொல்லப்பட்டது. இந்திய அணியின் முன்னாள் பவுலர் அஸ்வினும் இதேக் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் “மன்கட் முறையில் அப்பீல் செய்ததை பண்ட் திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு மிகப்பெரிய அவமானம். அவர் இதனால் கூனிக் குறுகிப் போயிருப்பார். இனிமேல் இதுபோல அவுட் செய்ய முயலமாட்டார். ஒரு கேப்டனாக பண்ட் அவரை ஆதிரித்திருக்க வேண்டும். ஆனால் பண்ட், கோடிக் கணக்கானோர் முன்னிலையில் அவரை விமர்சித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments