Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

vinoth
திங்கள், 7 ஏப்ரல் 2025 (06:59 IST)
ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பெற்ற அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணி இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது.  அந்த ஐந்து முறையும் தோனிதான் சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக வழிநடத்தினார். ஆனால் கடந்த ஆண்டு அந்த அணியில் கேப்டன் பொறுப்பு தோனியிடம் இருந்து ருத்துராஜுக்குக் கைமாற்றப்பட்டது.

தோனியின் வயதைக் கணக்கில் கொண்டும், தோனி இருக்கும்போதே அடுத்தக் கேப்டனைத் தயார் செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு சி எஸ் கே அணி ப்ளே ஆஃபுக்கு செல்லவில்லை. இந்த ஆண்டும் முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோற்றுள்ளது. இதனால் அணி மீது பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அஸ்வின் நடத்தி வரும் யுடியூப் சேனல் ஐபிஎல் போட்டிகள் பற்றிய அலசல் வீடியோவை வெளியிட்டு வந்தது. அதில் சி எஸ் கே அணியின் தோல்விக்கு அந்த அணி சரியான வீரர்களை அணியில் எடுக்காததுதான் காரணம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது சி எஸ் கே போட்டி பற்றிய அலசல் வீடியோவை தாங்கள் வெளியிடப்போவதில்லை என அந்த சேனல் அறிவித்துள்ளது. சி எஸ் கே அணியில் அஸ்வின் இருப்பதால், அவர் நடத்தும்  சேனலில் அணியின் குறைபாடுகளைப் பேசுவது சர்ச்சை எழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments