அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

vinoth
சனி, 31 மே 2025 (13:25 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.   அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். அவர் 9 நான்கு, சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்திலேயே ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்தாலும் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இலக்கைத் துரத்தினர். ஆனாலும் தேவைப்படும் ரன்கள் அதிகமாக இருந்ததாலும், அவ்வப்போது விக்கெட்கள் விழுந்ததாலும் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இந்த தோல்வியால் குஜராத் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் மகன் அழுதபடி காணப்பட்டார். இது சம்மந்தமான வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. நெஹ்ராவும் இதுபோல் களத்தில் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments