ஜூன் 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தின் மூலம் 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிக பட்சமாக 98 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய ஆஸி அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் சேர்த்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆஸி அணி 221 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகியுள்ளது.