Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்கும் ஆஷஸ் தொடர்… சாதனை படைக்கக் காத்திருக்கும் ஆண்டர்சன்!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (13:50 IST)
எப்படி இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை இரு நாட்டு ரசிகர்களும் ஒரு வெறியோடு பார்க்கிறார்களோ அதுபோல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு ரசிகர்கள் வெறியோடு பார்க்கும் ஒரு தொடர்தான் ஆஷஸ்.

இன்று ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த முறை கோப்பையை வெல்லப் போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அது போல மற்றொரு விஷயத்துக்காகவும் இந்த தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அது ஆண்டர்சனின் 700 ஆவது விக்கெட். இதுவரை 179 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 685 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் 15 விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் கிரிக்கெட்டில் உலகில் முதல் முதலாக 700 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.

அதே போல ஸ்டுவர்ட் பிராட் 18 விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments