கிரிக்கெட் உலகில் அதிகபட்ச சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் அரங்கில் தனது 10000 ரன் மைல் கல்லை கடந்து சாதனை புரியும் போது அவருக்கு வயது 31 ஆண்டுகள், 10 மாதம் மற்றும் 20 நாட்கள் ஆகும். இந்த சாதனையை இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் 31 ஆண்டுகள், 5 மாதங்களில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.
இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த சாதனையை தற்போது நடந்து வரும் இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின், டிராவிட், சங்கக்காரா, லாரா, சந்தர்பால் போன்றோர் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆனால், ஒரு இங்கிலாந்து வீரர்கள் கூட இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியது கிடையாது.
ஆனால் தற்போது டெஸ்டில் 10000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 12-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.