Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்படவில்லை… அகார்கர் விளக்கம்!

vinoth
திங்கள், 22 ஜூலை 2024 (16:08 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே அவர் டி 20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் இப்போது ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் பரிசீலிக்கப்படவில்லை என்பதால் அவரின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது ஜடேஜாவின் எதிர்காலம் குறித்து பேசியுள்ள தேர்வுக்குழு தலைவர் “ஜடேஜா முக்கியமான வீரர். அவரை நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக நீக்கிவிடவில்லை. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரவுள்ளது. அதன் பின்னர் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் பரிசீலிக்கப்படுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

ஜெய்ஸ்வாலின் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸின் பந்து!

தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டம்… ரிஷப் பண்ட் வெளியேற்றம்… முதல் நாளில் இந்தியா நிதான ஆட்டம்!

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments