Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸை மட்டும்தான் வென்றீர்கள்… உங்களால் ஏமாற்றம் அடைந்தேன் – பாகிஸ்தான் அணியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!

vinoth
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (12:47 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் “எங்கள் அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி ஏமாற்றம் அளித்தது.  யாராக இருந்தாலும் கடுமையான ஒரு போட்டியைக் காண விரும்புவார்கள்.

டாஸ் தவிர்த்து, போட்டியின் எந்த அம்சத்தில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். விளையாட்டில் வெற்றி தோல்விகள் வரும். ஆனால் நீங்கள் தோற்றால் கூட பார்வையாளர்களின் மனங்களை வெல்லும் சூழல் வரும்.  பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் அதைக் கூட செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து வெளியேற்றம்.. மீண்டும் மாற்றப்படுகிறாரா பயிற்சியாளர்?

அடுத்தடுத்து இரண்டு போட்டிகள்… இந்திய அணியில் இரு வீரர்களுக்கு தசைபிடிப்பு!

மகளிர் பிரீமியர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி தோல்வி..!

77 ரன்கள் அடித்த வங்கதேச கேப்டன் ஷாண்டோ அவுட்.. நியூசிலாந்து அபார பந்துவீச்சு..!

சி எஸ் கே அணியில் பந்துவீச்சு யூனிட்டில் இணையும் பிரபலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments