Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து வெளியேற்றம்.. மீண்டும் மாற்றப்படுகிறாரா பயிற்சியாளர்?

vinoth
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (09:26 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

இந்நிலையில் இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆக்கிப் ஜாவேத் மற்றும் அவரது குழுவினர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தான் அணியில் பல பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு பின்னர் குறுகிய காலத்திலேயே நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் ஜேஸன் கில்லஸ்பி மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் ஆகியோர் அந்த அணியில் பயிற்சியாளராக செயல்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments