Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

vinoth
புதன், 26 ஜூன் 2024 (08:15 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் இருந்து அடுத்த கட்டத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று நடந்த கடைசி சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி வங்கதேசத்தை வீழ்த்தியது.

இந்த போட்டியின் இறுதிகட்டத்தில் இரு அணிகளும் சம வெற்றி வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அப்போது மழை வருவது போல இருந்தது. மழை வந்து போட்டி தடைபட்டால் அது ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகம் என்பதால் அந்த அணியின் பயிற்சியாளர் ஜானதான் ட்ராட் மெதுவாக விளையாடுங்கள் என்று பெவிலியனில் இருந்து சிக்னல் கொடுத்தார்.

அதைப் பார்த்த ஆப்கான் வீரர் குல்புதீன் ஸ்லிப்பில் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது திடீரென தசை பிடிப்பு ஏற்பட்டு வலிப்பது போல கீழே விழுந்து நடிக்க ஆரம்பித்தார். உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் போட்டி முடிந்த போது வெற்றி உற்சாகத்தில் மின்னல் வேகத்தில் ஓடி கொண்டாடினார். இதன் மூலம் அவர் வேண்டுமென்ற தசைப்பிடிப்பு வந்தது போல நடித்தது தெரியவந்துள்ளது.

இதை குறிப்பிட்டு பேசிய வர்ணனையாளர் இயான் ஸ்மித் “உங்கள் மருத்துவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு 8 மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. அந்த மருத்துவர்தான் உலகின் எட்டாவது அதிசயம்.” என ஜாலியாகக் கலாய்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments