Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான சாதனை… இரண்டாவது வீரராக இணைந்த ஆடம் ஸாம்பா!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (10:31 IST)
இப்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 416 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹெண்ட்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 83 பந்துகளில் 174 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா மிக மோசமாக பந்துவீசினார். அவர் ஓவரில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினர்.

அவர் நேற்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 113 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் மிக அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை மற்றொரு ஆஸி வீரரான மைக் லெவியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மைக் லெவிஸ் 2006 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 10 ஓவர்களில் 113 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments