Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் செய்யாத சாதனை! வாய்ப்பு தருமா பிசிசிஐ? இறுதிப் போட்டியில் இடம்பெறுவாரா வருண் சக்ரவர்த்தி?

Prasanth Karthick
வியாழன், 6 மார்ச் 2025 (10:29 IST)

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் இறுதிப் போட்டியில் வருண் சக்ரவர்த்தி இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி தொடர் வெற்றிகளை கண்டு இறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது, இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக நடந்த லீக் சுற்றுகளிலும், அரையிறுதியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் வருண் சக்ரவர்த்தி.

 

மிகவும் குறைவாகவே வருண் ப்ளேயிங் 11ல் எடுக்கப்பட்டாலும், எப்போது பந்து வீச வந்தாலும் குறைந்த ரன்களுக்குள் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு தூணாக செயல்பட்டு வருகிறார். குரூப் மேட்ச்சில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண், ஆஸ்திரேலியாவுகு எதிரான அரையிறுதியில் யாராலும் வீழ்த்த முடியாத ட்ராவிஸ் ஹெட்டை வந்ததுமே வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்டை குறைக்க உதவினார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ட்ராவிஸ் ஹெட்டை 10 ஓவர்களுக்கு வீழ்த்திய முதல் வீரர் வருண் சக்ரவர்த்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் களமிறக்கப்பட்ட இரண்டு போட்டிகளிலுமே திறமையை காட்டியுள்ள வருண் சக்ரவர்த்திக்கு இறுதி போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் லீக் போட்டிகளிலேயே நியூசிலாந்தின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கும் வருண், இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்துக்கு எதிராக இறங்குவது இந்தியாவின் வெற்றியை உறுதி செய்யும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments