எல்லாரும் உங்க வீட்டுப் புள்ளையா நினைச்சு என்ன மன்னிச்சிடுங்க – டிவில்லியர்ஸ் சரண்டர்!

vinoth
சனி, 10 பிப்ரவரி 2024 (07:23 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக சொல்லப்பட்டது. கோலியின் தாயார் உடல்நிலை நலிவு காரணமாக அவர் கூட இருப்பதற்காக கோலி விடுப்பில் சென்றதாக சொல்லப்பட்டது.

மற்றொரு தகவலாக கோலி, தனது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக உள்ளதால் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருவதாக அவரின் ஆர் சி பி சக வீரரான டிவில்லியர்ஸ் தெரிவித்திருந்தார். இதை உண்மை என நம்பி ரசிகர்கள் பலரும் அனுஷ்கா- கோலி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இது சம்மந்தமாக பேசியுள்ள டிவில்லியர்ஸ் கோலி விஷயத்தில் நான் தவறான தகவலை சொல்லிவிட்டேன் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவரது யுடியூப் சேனலில் பேசும்போது “கோலியின் விலகலுக்கான காரணம் யாருக்கும் தெரியாது. அவரின் உடல்நலனும் மனநலமும் சிறப்பாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.  அவர் விரைவில் கம்பேக் கொடுப்பார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments