இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டருமான யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியதன் வீடியோ இணைப்பு கீழே.
கடந்த 2007ஆம் ஆண்டு 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசதில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய வீரர் யுவராஜ் சிங்கை இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப் சீண்டினார். அப்போது ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச வந்தார். கோபத்தின் உச்சியில் இருந்த யுவராஜ் சிங் 6 பந்துகளிலும் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.
இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் 16 பந்துகளில் 58 (3 பவுண்டர்கள், 7 சிக்ஸர்கள் உட்பட) ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.