இந்திய வீரர் முகமது சிராஜின் அபார பந்து வீச்சால் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்டது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் நடைபெற்றது.
இதில் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய தென்னாபிரிக்கா வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய வீரர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பும்ரா, முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதை அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிசை விளையாடி வருகிறது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே வெளியேறினார்.