Publish Date: Wed, 27 Sep 2023 (20:47 IST)
Updated Date: Wed, 27 Sep 2023 (20:54 IST)
இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், யாதவ் தலா 2 விக்கெட்டும், சிராஜ் மற்றும் கிருஷ்ணா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 81 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னும், கோலி56 ரன்னும், கே.எல்.ராகுல் 26 ரன்னும் அடித்தனர்.
தற்போது, ஜடேஜா 10 ரன்னுடனும், யாதவ் 0 ரன்னுடன் விளையாடி வருகின்றனர். இந்தியா 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.