Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்..! மாஸ் காட்டும் ஆர்சிபி! – போராடும் டெல்லி அணி!

Prasanth Karthick
ஞாயிறு, 17 மார்ச் 2024 (20:22 IST)
ஆர்சிபி – டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான மகளிர் பிரிமீயர் லீக் போட்டியில் ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த தொடங்கியுள்ளது.



மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் போட்டியிட்டு வந்த நிலையில் இறுதி போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தகுதி பெற்றன.

தற்போது நடைபெற்று வரும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மெக் லேனிங், ஷபாலி வெர்மா பார்ட்னர்ஷிப் 7வது ஓவர் வரை நின்று சிறப்பாக விளையாடி வந்தனர். ஷபாலி வெர்மா 27 பந்துகளில் 44 ரன்களை அடித்து அரை சதம் நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நிலையில் சோஃபி மொலினிக்ஸின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவருக்கு பின் களமிறங்கிய ஜெமியா ரோட்ரிகஸ், ஆலிஸ் கேப்சியையும் ஒரு ரன்கள் கூட அடிக்க விடாமல் அடுத்தடுத்த பந்துகளில் சோஃபி மொலினிக்ஸ் டக் அவுட் செய்தார். இதனால் தற்போது 10 ஓவர்கள் முடிவில் டெல்லியின் ஸ்கோர் 72 ரன்களாக உள்ளது. தொடர்ந்து இவ்வாறு அதிரடி காட்டினால் 140-150 ரன்களுக்குள் டெல்லியை ஆர்சிபி அணி கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments