Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 வது ஐபிஎல் தொடர் நடக்கும் தேதி அறிவிப்பு... சென்னையில் முதல் போட்டி ...

Advertiesment
14th IPL series date announced
, ஞாயிறு, 7 மார்ச் 2021 (13:54 IST)
14-வது ஐபிஎல்  தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.  இத்தொடரில் முதல் போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் இந்தாண்டு எப்போதும் நடத்தப்படும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதுகுறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 14வது ஐபிஎல்  தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி வரும் மே 30 ஆம் தேதி முடியவுள்ளது.

இத்தொடரில் முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், மும்பை – பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இதில், மொத்தம் 56 லீக் போட்டிகள் நடக்கும் எனவும்,  இவை , சென்னை,மும்பை,தில்லி, கொல்கத்தா, பெங்களூரு , ஆமதாபாத் ஆகிய மைதானங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் திறக்கப்பட்ட குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி, நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி தரவரிசை மீண்டும் முதல் இடத்தில் இந்தியா!