Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IND vs AUS Final Live: 10 ஓவர் முடியுறதுக்குள்ள முக்கிய விக்கெட்டுகள் காலி! – அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

Advertiesment
Rohit
, ஞாயிறு, 19 நவம்பர் 2023 (14:56 IST)
உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடி வரும் இந்தியா முதல் 10 ஓவர் முடிவதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.



பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையே நடந்து வரும் உலக கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

ஆரம்பமே சிறப்பான ஆட்டத்தை கொடுத்து பவுண்டரிகள், சிக்ஸர்கள் விளாசி வந்தார் ரோகித் சர்மா. ஆனால் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 4வது ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஜாம்பாவிடம் பந்தை கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அரைசதத்தை நெருங்கியிருந்த ரோகித் சர்மா 9வது ஓவரில் தூக்கி அடிக்க முயன்று மேக்ஸ்வெல் பந்தில் ட்ராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்ததாக களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 10வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகியுள்ளார். அடுத்தடுத்து இந்தியாவின் முக்கியமான 3 வீரர்கள் பவர்ப்ளே முடிவதற்கு அவுட் ஆகி சென்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே அணியில் 500 ரன்களுக்கும் மேல் 3 வீரர்கள்.. உலகக்கோப்பையில் இதுதான் முதல்முறை..!