மஹாராஷ்டிராவின் புனே நகரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத் பவார் திறந்து வைத்தார்.
சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரடா ராய் பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில், ஐ.பி.எல் தொடரின் 9 போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா கிரிக்கெட் கூட்டமைப்பின் சார்பில் கட்டப்பட்ட இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 45 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். திறப்பு விழாவில் மஹாராஷ்டிரா முதலமைச்சர் பிருத்விராஜ் சவுஹான் உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர்.