நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் விலகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அணியின் முக்கிய அணியாக உள்ளது நியூசிலாந்து. தற்போது, இந்த அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி-20, ஒரு நாள் உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து, பிரபல வீரர் மார்டின் கப்தில் விலகியுள்ளார்.
இவர், டி-20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் இடம்பெற்று திறமையை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டில், ஏற்கனவே, போல்ட், காலின் டி கிரராண்ட்ஹோம் ஆகியோர் மத்திய ஒப்பந்தத்தில் ( NYC)இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது, கப்திலும் விலகியுள்ளார். அவரது சொந்த விருப்பத்திற்கு நியூசிலாந்து அணி ஒப்புதல் வழங்கியுள்ளது.