கொல்கத்தா அணியின் சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சை நடுவர்கள் ஆட்சேபித்ததை அடுத்து அவர் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டது.
கடந்த 11 ஆம் தேதி நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியிடம் தோல்வியை தழுவியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டிங் செய்தபோது பந்து வீசிய சுனில் நரேன் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் சுனில் நரேன் பந்துகளை வீசுவதற்கு பதிலாக காயம்படுத்தும் வகையில் எறிவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்த்து சுனில் நரேனுக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐசிசி சுனில் நரேனின் பெயரை எச்சரிக்கை பட்டியலில் வைத்திருந்தது. சுனில் நரேனுக்கு தொடர்ந்து பந்துவீச தடை விதிக்கப்படாவிட்டாலும் அவர் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் தனது பந்துவீச்சை சோதனைகளுக்கு உட்படுத்தி அதில் எந்த தவறும் இல்லை என நிருபித்துள்ளார். இதுபற்றி ஐசிசி ’கொல்கத்தா நைட் ரைடர் வீரர் சுனில் நரேனின் பந்துவீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் அதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை’ எனக் கூறியதை அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவார் என நம்பப்படுகிறது.