Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறைவனை அடைய தேவ குமாரர் காட்டிய வழி

இறைவனை அடைய தேவ குமாரர் காட்டிய வழி
, வெள்ளி, 24 டிசம்பர் 2010 (16:57 IST)
ஜீவிதத்திற்கான வழியையும், அணுகுமுறையையும் காட்டியதோடு நிற்கவில்லை, இறையனுபவத்தை பெறுவதற்கான வழியையும் காட்டுகிறார் தேவ குமாரர்.



இதோ அவர் கூறியது: “இடுக்கான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; (இறையுலகின்) வாசலிற்க்குப் போகும் வழி விரியும்; வழி விசாலமுமாயிருக்கிறது; அந்த வழியில் பிரவேசிப்பவர்கள் அனேகர்.” என்றும், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றும் கூறி தெளிவாக வழிகாட்டியுள்ளார் (மத். அதி.7.13,14).

நம்முடைய புறத்தை நாடும் புத்தியையும், புலன்களையும் அடக்கி நமது ஜீவனின் உட்சென்று நமது உண்மையறிய கர்த்தர் வழிகாட்டியுள்ளார் என்று மேற்சொன்ன விவிலிய வாசகங்களை விளக்கிக் கூறியுள்ளனர் ஆன்மீக முன்னோடிகள்.

நம்மை நாமறிந்து இறைவனின் பாதையில் நடப்பதை திசை திருப்பக்கூடிய போலிகளையும் கர்த்தர் அடையாளம் காட்டியுள்ளார்:

“கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்தில் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என்று கூறியது மட்டுமின்றி, அவர்களின் செயல்களால் அவர்களை அடையாளம் காணுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்: “அவர்களுடைய கனிகளால் (செயல்களால்) அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்புதர்களில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பி அடையாளம் காட்டியுள்ளார்.

தன்னை கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவர்கள் அல்ல, “பரலோகத்திலிறுக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிப்பான்” என்று உறுதியாகக் கூறியுள்ளார் தேவ குமாரர்.

இப்படி வாழ்வையும் விளக்கி, அதனை எதிர்கொள்வதற்கு வழியும் காட்டி, இறைவனை நாடச் சொல்லி, அதற்கான ரகசியத்தையும் எடுத்துரைத்து ஒரு முழு வழி காட்டியாய் வாழ்ந்தார் தேவ குமாரர்.

கர்த்தர் பிறப்பு இவ்வுலகிற்கு நல் வழிகாட்டியது, அவரது உலக வாழ்வின் முடிவு நம்மை, நாம் வாழும் இவ்வுலகை புனிதப்படுத்தியது.

நமது வாழ்வின் ஒளியாய் திகழும் கர்த்தரின் பிறப்பை உளமார மகிழ்ந்து கொண்டாடுவோம். அவர் காட்டிய உண்மைப் பாதையில் நடந்து அவர் உறுதியளித்த பரலோக சாம்ராஜ்யத்தை வரவேற்கத் தயாராவோம்.

உளம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துகள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவ குமாரரின் அழைப்பு