இந்திய வேதாகம சங்கம் நடத்தும் பைபிள் கண்காட்சி சென்னையில் உள்ள மெமோரியல் ஹாலில் புதன்கிழமை தொடங்கியது.
புதன் கிழமை துவங்கி நடைபெற்று வரும் இந்த கண்காட்சி 8ஆம் தேதி வரை நடைபெறும். பார்வையற்றோர் படிப்பதற்கு ஏற்ற பிரெய்லி முறை பைபிள், முதல் முறையாக பைபிளை படிப்பவர்களுக்கான விஷேச பைபிள், சிறுவர்களுக்கான பைபிள் என பல்வேறு வகையான பைபிள்கள் இடம்பெற்றுள்ளது இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாகும்.
கைக்கு அடக்கமான சிறிய பைபிள், பல்வேறு மொழிபெயர்ப்பு பைபிள்கள், இந்திய மொழிகளில் பைபிள்கள் உள்ளிட்ட 450 - க்கும் மேற்பட்ட பைபிள் வகைகள் இங்கு கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தகங்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்கள், கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் பாடல்கள், தியான இசைக் கலைஞர்களின் படைப்புகள் உள்ளிட்டவைகளும் உள்ளன.
கண்காட்சியில் 25 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும்.