புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன.
இயேசு நாதரை சிலுவையில் அறைந்த நாளை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளிக்கிழமை, துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளிக்கிழமையில் தேவாலயங்களில் 3 மணி நேரம் சிறப்பு பிராத்தனை நடப்பது வழக்கம். அந்த வகையில் சென்னையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது.
பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் வெள்ளை ஆடைகளை அணிந்து பிராத்தனையில் கலந்து கொண்டனர்.
இயேசுபிரானுக்கு மெழுகுவர்த்திகளை ஏற்றியும், வெட்டிவேர், மரிக்கொழுந்து போன்ற வாசனை பொருட்களை படைத்தும் சென்றனர்.