Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவேரியார் ஆலய 155ம் ஆண்டு திருவிழா

Advertiesment
சவேரியார் ஆலய 155ம் ஆண்டு திருவிழா
பல்லாவரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய 155ம் ஆண்டு திருவிழா வரும் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 7ம் தேதி வரை இவ்விழா நடைபெறும்.

28ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடி பவனி, கொடியேற்றம், நவநாள் ஜெபம், திருப்பலியுடன் விழா தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தேர் பவனி, நவநாள் ஜெபம், திருப்பலிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த அன்பியங்கள் செய்துள்ளன.

7ஆம் தேதிதான் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி. அன்று மாலை 5 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. அன்றைய தினம் நூற்றுக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil