விவிலியத்தின் படி, இயேசு சிலுவையில் அறையுண்ட மூன்றாவது நாள் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தார்.
மத்தேயு நற்செய்தியின் படி, இறை தூதர் ஒருவர் இயேசுவின் கல்லறை அருகே தோன்றி இயேசுவின் உயிர்ப்பை அவரது உடலுக்கு வாசனை பொருட்கள் பூச வந்த பெண்களுக்கு அறிவித்தார்.
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி, நீங்கள் பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 28 : 5
அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். 28 : 6
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள், அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அங்கே அவரைக் காண்பீர்கள், இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 28 : 7
லூக்காவின் படி இரண்டு இறைதூதராகும் மாற்குவின் படி அது வெண்ணிர ஆடை அணிந்த வாலிபனாகும். மாற்கு இயேசு முதலாவதாக மர்தலேன் மரியாளுக்கு தோன்றினார் .
யோவான் நற்செய்தியில் மரியாள் கல்லைறயுள் பார்க்கும் போது இரண்டு இறைத்தூதர் உயிருடன் உள்ளவரை இங்கு ஏன் தேடுகிறீர்கள் என கேட்டார். அவர் திரும்பியபோது இயேசுவைக் கண்டார், எனினும் இயேசு பெயர் சொல்லி அழைக்கும் வரை அடையாளம் காண முடியாதிருந்தார்.
அவர்கள் அவளை நோக்கி ஸ்திரியே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள், என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள், 20 : 13
இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டான், ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.20 : 14
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 20 : 15
இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 20 : 16
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 20 : 17
மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவகளையும் சீஷருக்கு அறிவித்தாள். 20 : 18
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 20 : 19
அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். 20 : 20
அப்போஸ்தலர் பணி நூல் இயேசு அதற்கு பிறகு, நாற்பது நாட்களுக்கு பல இடங்களில் சீடருக்கு தோன்றியதாகக் குறிப்பிடுகிறது.
இயேசுவின் உயிர்ப்பின் சில மணிகளுக்குப் பிறகு எம்மாவுஸ் நகருக்கு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு சீடருக்குத் தோன்றினார். அன்று மாலை ஒன்றாக கூடியிருந்த சீடருக்கு தோன்றினார். இயேசுவின் பணி யூதரை முதன்மை படுத்தி நடந்தாலும் இயேசு இவ்வேளையில் சீடருக்கும் உலகெங்கும் சென்று சகலருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் என்றார்.
இதை கூறிய பின்பு ஒலிவ மலையில் இயேசு விண்ணேறினார். அவரை ஒரு முகில் மறைத்து விண்ணுக்கு எடுத்துக் கொண்டது. இயேசு தான் திரும்பவும் வருவதாக வாக்களித்தார் இது இரண்டாம் வருகை என அழைக்கப்படுகிறது.
தீர்க்க தரிசனம் நிறைவேறல்
நற்செய்திகளுக்கிணங்க இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம், உயிர்ப்பு என்பன பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள தீர்க்க தரிசனங்களின் நிறைவேற்றமாகும்.
உதாரணமாக இயேசு கன்னியிடமிருந்து பிறப்பதையும் அவர் எகிப்துக்கு தப்பியோடுவதையும் ஏசாயா 7:14 இல் காணலாம்.
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். 7: 14
தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். 7:15