பெரம்பூரில் உள்ள தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 109வது ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
விழாவின் இறுதி நாளான நேற்று, ஆடம்பர தேர் பவனி நடத்தப்பட்டது.
திருத்தலத்தில் இருந்து புறப்பட்ட தேர், பெரம்பூர் ரயில்வே விளையாட்டுத் திடலை சென்றடைந்தது. தேர் பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.