சந்தேகம் என்பது எப்படி ஒரு குடும்பத்தையே அழித்து விடுகிறதோ அது போலவே ஆண்டவரை வணங்குவதிலும் சந்தேகம் ஏற்பாடுமாயின் அதுவும் வாழ்க்கையையே கெடுத்து விடும்.
சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பானவன். அப்படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடம் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக என்று கூறுகிறது பைபிள்.
நம்பிக்கையுடன் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது நிஜமாகும் என்று இயேசு கூறுகிறார்.
அதற்கு உதாரணமாக, ஒருவன் மிகுந்த நம்பிக்கையுடன் மலையைப் பார்த்து நீ பெயர்ந்து போய் சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று கூறுவானாயின், அவன் சொன்னபடியே ஆகும் என்று சொல்கிறார்.
எனவே சந்தேகத்தைப் போக்குங்கள். அழிவைத் தடுத்து நிறுத்தங்கள்.