குழந்தைகளா இனி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி அதற்கான பொருளையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதோடு திருக்குறளின் சிறப்பையும் தெரிந்து கொள்வீர்கள்.
திருவள்ளுவரைப் பற்றி அறியப்பட்ட செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர்.
கடவுள் வாழ்த்து
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
கேட்காத செவி பார்க்காத கண் முதலியன போல, எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.