குழந்தைகளா இனி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி அதற்கான பொருளையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதோடு திருக்குறளின் சிறப்பையும் தெரிந்து கொள்வீர்கள்.
திருக்குறளை இயற்றியது திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது.
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
விளக்கம் : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நிலைப் பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.