குழந்தைகளா இனி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி அதற்கான பொருளையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதோடு திருக்குறளின் சிறப்பையும் தெரிந்து கொள்வீர்கள்.
திருக்குறளின் சிறப்பு
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
திருக்குறளை இயற்றியது திருவள்ளுவர்.
கடவுள் வாழ்த்து
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
விளக்கம் : கடவுளின் உண்மை புகழை விரும்பி அன்பு செலுத்துகிறவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.