குழந்தைகளா பள்ளி விடுமுறையை எப்படிக் கழிப்பது என்று யோசிக்கின்றீர்களா? நிறைய இருக்கு செய்வதற்கு. ஒரு பூசணிக்காயை வைத்து நைட் லேம்ப் செய்து பார்க்கலாமா? மிகவும் எளிதுதான்.
இதனை செய்ய ஒரு பூசணிக்காய், கத்தி, குழம்பு கரண்டி, ஸ்கெட்ச் பென், கறிவேப்பிலை குச்சி அல்லது அறுகம்புல்.
முதலில் பூசணிக்காயின் மேல் பகுதியை வட்டமாக கட் செய்து தனியாக தட்டு போல எடுத்து வைத்து விடுங்கள்.
பின்னர் ஒரு கரண்டியை வைத்து உள்ளே இருக்கும் தசைப் பற்றை எடுத்து சுத்தம் செய்யவும்.
பின்னர், பூசணிக்காயில் கண், மூக்கு, வாய் போன்றவற்றை ஸ்கெட்ச் பென்சில் கொண்டு வரையவும்.
கண், மூக்கு தான் வரைய வேண்டும் என்றில்லை. குருவி, வீடு, பிறை நிலா, நட்சத்திரம் என எதை வேண்டுமானாலும் வரையலாம்.
இப்போது கத்தியை எடுத்து நீங்கள் வரைந்த பாகத்தைக் வெட்டி எடுக்கவும்.
பின்னர் முதலில் வெட்டி வைத்த பூசணிக்காயின் மேல் பாகம்.. ஆம், அதான் தட்டு போன்று எடுத்தோமே அதில் சிறு சிறு துளைகள் போட்டு அதில் கறிவேப்பிலை குச்சி அல்லது அறுகம்புல்லை நடவும்.
இப்போது பூசணிக்காயின் உள்ளே ஒரு அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு அதன் மேல் பாகத்தில் தட்டு போன்ற எடுத்ததைக் கொண்டு மூடிவிடவும்.
உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷ நிகழ்ச்சி என்றால் அப்போது இதனை செய்து அசத்தலாம்.
சபாஷ் வாங்குவதோடு.. இதனை பலரும் எங்கள் வீட்டிற்கும் செய்து கொடுக்கச் சொல்லி கெஞ்சுவார்கள்.