குழந்தைகளா இனி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி அதற்கான பொருளையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதோடு திருக்குறளின் சிறப்பையும் தெரிந்து கொள்வீர்கள்.
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் எனும் புகழ்பெற்றது நாம் பயிலும் திருக்குறள்.
கடவுள் வாழ்த்து
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
விளக்கம் - தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவருக்கு அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.