குழந்தைகளே விடுகதைகள் சிந்தனையின் வேகத்தைத் தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. மறைமுகமாக ஒரு பொருளைப் பற்றி சொல்வதும், அதற்குள் ஒளிந்திருக்கும் பொருளை கண்டறிவதும்தான் விடுகதை.
சரி சில விடுகதைகளை இங்கே பார்ப்போம்...
நல்லவர் கொள்ளும் தானம்; நாலு பேருக்குத் தர முடியாத தானம். அது என்ன?
நிதானம்
பகலெல்லாம் வெறுங்காடு; இரவெல்லாம் பூங்காடு. அது என்ன?
வானம்
காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன?
சப்பாத்திக்கள்ளி
உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும். அது என்ன?
வியர்வை
குத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல் சொல்கிறான்.
தபால்
மழைக் காலப் பாட்டுக் காரன், துள்ளிக் குதித்து ஆடிடுவான் கடைசியில் பாம்புக்கு இறையாவான்.
தவளை