Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முட்டாள் கழுதை

முட்டாள் கழுதை
, புதன், 12 டிசம்பர் 2012 (14:16 IST)
FILE
ஒரு கிராமத்தில் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் பக்கத்து ஊருக்கு சென்று உப்பு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உப்பு மூட்டைகளை தான் வளர்த்து வந்த கழுதை மேல் வைத்து அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வார்.

இவ்வாறு ஒரு முறை கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை கட்டி ஆற்றினை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதகமாக அக்கழுதை ஆற்றில் வழுக்கி விழுந்தது. இதனால் மூட்டையில் இருந்த உப்பு தண்ணீரில் கரைந்தது. முதுகில் இருந்த மூட்டை லேசானதை உணர்ந்த கழுதை இரண்டாவது முறை வியாபாரி உப்பு மூட்டையை கட்டியதும் வேண்டுமென்றே ஆற்றை கடக்கும்போது தண்ணீரில் விழுந்தது. மீண்டும் தண்ணீரில் கரைந்து உப்பு மூட்டைகள் லேசானது.

இதனை கவனித்த வியாபாரி மூன்றாவது முறையாக கழுதையின் முதுகில் பஞ்சு மூட்டைகளை கட்டினார். இம்முறையும் ஆற்றில் விழுந்த கழுதைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீரில் நினைந்த பஞ்சு மூட்டைகளின் இருமடங்கு சுமையை சுமந்தபடியே கழுதை வியாபாரியை பின்தொடர்ந்து சென்றது.

நாம் சிறந்த புத்திசாலி என நினைத்து கொண்டு சரியான முறையில் யோசிக்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடக்கூடாது என்பதே இக்கதையின் நீதியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil